Wednesday, June 15, 2005

சம்திங் பண்டமெண்டலி ராங்

பண்டமெண்டலி சம்திங் ராங். தாலி கட்டும் சமுதாயத்தின் கயவாளி தனம். அதே நேரம் பெமினிஷம் பேசும் பெண்ணின் பொறுக்கித் தனம்.

திருமணம் என்று பெண்ணுக்கு வேலி போட்டு வைக்கும் சமுதாயத்தில் பொண்ணு பார்க்கும் வைபவம் என்று ஒன்று உண்டாம். அதற்கு முன் பின் தெரியாத என் கணவர் என்ற அந்தஸ்தில் இப்போது சுகம் காண்பவர் வந்தார். அவர் எல்லா சுதந்திரமும் எனக்கு கொடுப்பாராம். என்னை நண்பன் மாதிரி நினைப்பாராம். நான் படித்துக் கொண்டிருந்த மேல் படிப்பை தொடர அனுமதிப்பாராம். பிறகு என் தந்தை பவ்யமாக கரஸ்ஸில் படித்துக் கொண்டே நான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை வந்தவருக்கு பிடித்திருந்தால் நான் அந்த வேலையை தொடருவதாகவும் வந்தவருக்கு பிடிக்காவிட்டால் அவள் வேலைக்கு போக மாட்டாள் என்று சொன்னார். பெத்த கடனுக்காக என்னை படிக்க வைச்ச அப்பா, என்னை அப்படி அடிமையாக்க எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருந்தார். வந்தவருக்கு இன்னும் மனைவி ஆகாத நிலையில் "பையன் ரொம்ப பெருந்தன்மை மிக்கவராம். நான் கல்யாணத்துக்கு அப்புறமும் வேலை பார்க்க அனுமதிப்பாராம்" என் அப்பா சொன்னார். ஸ்டுப்பிடிட்டி. ரெடிகுலஸ். ராங் சம்திங் டோட்டலி ராங் பண்டமெண்டலி ராங்.

"என்ன இருந்தாலும் அவர் எனக்கு தொட்டு தாலிகட்டின புருஷன்டீ" என்று எதை வேண்டுமானாலும் சகித்துக் கொண்டு அடுப்பாங்கரையிலே காலத்தை கழித்த என் அம்மாவிடம் நான் எப்படி வேறுமாதிரியான சுதந்திர சிந்தனையை எதிர்பார்க்க முடியும். என் அம்மாவுக்கு கிடைக்கும் ஒரே சுதந்திரம் அப்பா இல்லாத நேரம் தான். "அவர் வர்றதுக்குள்ளே சமைச்சி முடிக்கனும்டீ, அவர் வர்றதுக்குள்ளே வீட்டை ஒதுங்க வைக்கனும்டீ, அவர் வர்றதுக்குள்ளே கக்கூஸ் போயிட்டு வரணும்டீ" என் அம்மா. அவர் அவரு பெரிய மைசூர் மகராஜா. உண்மையில அவரு மகராஜா தான் அதுக்கு தான் எனக்கு மாப்பிள்ளை வாங்க விலை பேசிக்கிட்டு இருக்காறே.

இதுக்கு பேரு பெமினிஷம்ன்னு நான் நினைக்கலை. அப்படியே இது பெமினிஷமா இருந்தா நானும் பொறுக்கி தான். திருமணம் என்ற புனிதமான பொறுக்கிதனத்துக்கு அடிப்பட்டு போனவள் என்கிறதால நானும் ஒரு பொறுக்கி தான்.

ராங் சம்திங் ராங். சம்திங் பண்டமெண்டலி ராங்.

9 Comments:

Blogger குழலி / Kuzhali said...

முன்பு சுற்றிய சலாவரிசையே கலக்கல், அடுத்ததாக முதல் சுற்று சிலம்பம் கலக்கலோ கலக்கல்... விரிவான பின்னூட்டம் பிறகு இடுகின்றேன்...

8:56 AM  
Blogger துளசி கோபால் said...

வாம்மா மல்லி, மதுரை மல்லி.
ஏதோ நம்ம ஊர்க்காரரா ஆயிட்டீங்களா அதுலேயே இந்த ரெளத்திரம் பழகறது ரொம்ப சுலபமா ஆயிருது!!!

ஆடும்மா ஆடு!!!!
நாங்க இருக்கோம் பின்பாட்டுப் பாட!!!!

10:36 AM  
Blogger Akbar Batcha said...

அன்பின் மதுரை மல்லி,

வேகம் அவசியமே. அதே வேளை, வந்த வேகத்துடன் நின்றுவிடாமல் இந்த மனநிலை தொடர்ந்தால் பெண்களின் வாழ்க்கை நிலை சற்று முன்னேறியதாக இருக்கும். நிறைய பெண்கள் இவ்வாறெல்லாம் சிந்தித்து பிறகு ஆண்களின் ஆளுமைக்குள் தங்களை இழந்துவிட்டு ஒரு சராசரி நிலையைவிட பின்னோக்கி போய்விடுகிறார்கள்.

பிரச்சனை என்னவென்றால், பொதுவாக எல்லா பெண்களும், திருமணத்திற்கு பின் தங்களது லட்சியங்களை எல்லாம் மூட்டை கட்டி குப்பையில் எறிந்துவிட்டு கணவனின் லட்சியத்தில் கரைந்து விடுவதே. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் ஒருவருக்கொருவர் தங்களது லட்சியத்தில் முன்னேற உதவக் கூடியவர்களாக இருந்தால் நலம்.

12:59 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

//"சம்திங் பண்டமெண்டலி ராங்"
//
Yes. You are CORRECT !!!
Well expressed. Keep it up !!!

3:14 PM  
Blogger மதுரை மல்லி said...

ஃபீட்பேக் கொடுத்த எல்லாருக்கும் நன்றி.

அக்பர் அண்ணே, கொஞ்சம் எல்லை தாண்டி பேசினால் பெண்ணியம் பேசுகிறாள் என்று தட்டி மூலையில் உட்காரவைத்து விடுகிறார்கள். எல்லா பெண்களும் சுதந்திர சிந்தனை பெற வேண்டும்.அதே போல் பெண்ணியம் என்ற போர்வையில் எதையும் குப்புற கவிழ்த்தி குப்பையில் யாரையும் தள்ளிவிடாமலும் இருக்க வேண்டும். முக்கியமாக அடுத்தவர்களுக்கு அநியாயமாக கஷ்டம் கொடுக்கக் கூடாது. ஊக்கமொழிகளுக்கு நன்றி.

9:40 AM  
Blogger Akbar Batcha said...

அன்பின் சகோதரி,

சீர்திருத்தம் என்பது பெற்றோர்களாக இருப்பவர்களிடமிருந்து தொடங்க வேண்டும். இயற்கையிலேயே ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்று இரு பிரிவும் வேறுவிதமான சிந்தனைகளை கொண்டவர்களாகத்தான் வளர்ந்து வருகிறார்கள். அதற்காக ஆண் பிள்ளைகளின் ஆளுமை எண்ணங்களை வரவேற்று அதை வளர்த்துவிடும் பெற்றோர்கள், பெண் பிள்ளைகளின் சிந்தனைகளை அப்படி வளரவிட மறுக்கிறார்கள். பெண் இனத்திற்கென்று இருக்கும் அந்த பண்பு வகைகளை மனதில் கொண்டு அவர்களையும், ஆண்களைவிட உயர்வானவர்களாக கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை பெற்றோர்களிடத்தில் உருவாகுமானல் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

2:05 PM  
Blogger மதுரை மல்லி said...

அக்பர் அண்ணா, அருமையான கருத்துக்கள். என் சிந்தனையில் புகுந்தது. நன்றி.

8:44 AM  
Blogger Vetri Thirumalai said...

மல்லி அவர்களே வணக்கம்

இப்படிப்பட்ட சிந்தனை கொண்ட பெண்கள் ரெம்ப குறைவு.
உங்களுக்கு என் வாழ்த்துகள்.

சுதந்திரம் என்பது யாரும் யாருக்கும் கொடுக்ககூடியதல்ல. அது அவரவர் உரிமை. நம் மகளிர் இவ்வுண்மையை புரிந்து கொள்ளவேண்டும். பெண்களுக்கு கல்யாணம் தான் எல்லாம் என்ற மாயையை உடைத்தெரிந்தால் உண்மையான சீர்திருத்தம் நிகழும் என்பது என் கருத்து.

5:08 PM  
Blogger வெங்கட்ராமன் said...

"பையன் ரொம்ப பெருந்தன்மை மிக்கவராம். நான் கல்யாணத்துக்கு அப்புறமும் வேலை பார்க்க அனுமதிப்பாராம்" என் அப்பா சொன்னார். ஸ்டுப்பிடிட்டி.

அப்புறம் ஏன் அப்பா காசில படிக்கனும்,
உங்க சொந்த காலில் நிக்க வேண்டியதுதானே....

கல்யாண்ம் செய்துவைக்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே..

உஙகளுக்கு பிடித்தவறை திருமணம் செய்து கொள்ளலாம் அல்லவா.....

அத செய்யாம சும்மா.....

2:16 PM  

Post a Comment

<< Home