Wednesday, June 15, 2005

மார்பு பார்க்கும் கலாச்சாரம்

நல்ல இல்லை நிறைய பேரோட பார்வை நல்லயில்லை. நல்லவேயில்லை. கண்ணை பார்த்து பேசாமல் பெண்ணின் மார்பை பார்த்து பேசும் ஆண்கள் எத்தனை பேர் இங்கே? உங்கள் நெஞ்சையே ஒரு தரம் தொட்டுப்பார்த்துச் சொல்லுங்கள். கண்ணு தான்னால மார்பை நோக்கி போகுதா? உங்க மேல தப்பில்லை. காரணம் கலாச்சராமுன்னும் அசிங்கமுன்னும் சொல்லிபுட்டு பொண்ணை கையக் காமிச்சது செத்து போனதுகளும் இத்துப் போய் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களும் தான்.

நேற்றைக்கு ஈ.பி பில்லில் நடந்த குளறுபடி விசயமாக ஈ.பி ஆபீஸ் சென்றிருந்தேன். கவுண்டருக்கு பின்னால் இருப்பவர் "என்ன பிரச்சனை?" என்று விட்டு, பில்லில் நிகழ்ந்திருந்த குளறுபடியை நான் சொல்லி முடிவதற்குள் கண்ணை பார்த்து கவனித்துக் கொண்டிருந்தவர் 10 முறையாவது மார்பை நோட்டமிட்டிருப்பார். "முகத்தை பார்த்து பேசுடா" என்று சொல்வதற்கு எனக்கு ஒன்றும் நேரம் எடுத்திருக்காது. எனக்கு தெரியும் இது சொல்லி திருத்த முடியாத பழக்கம். அவர் மனதில் தங்கிப்போன சமூக அழுகளின் மிச்சம்.

சுரனை வரவைக்க வேண்டும் என்பதற்காக அவர் பேசும் போது முகத்தை பார்க்காமல் அவர் போட்டிருந்த கால்சட்டையையின் ஜிப்பையே வைத்த கண் வாங்கமால் பார்த்துக் கொண்டிருந்தேன். நெளிந்தார். வார்த்தையில் தடுமாறினார். வழிந்தார். அதே உணர்ச்சி+அவமானம் தானே எங்களுக்கும். அவர் திருந்த வேண்டும் என்பது என் ஆசையோ திருத்த வேண்டும் என்பது என் கடமையோ அல்ல.

இன்னும் இப்படிப்பட்ட ஆண்கள் எத்தனை பேர் நம் சமூகத்திலே.

34 Comments:

Blogger ஏஜண்ட் NJ said...

//காரணம் கலாச்சராமுன்னும் அசிங்கமுன்னும் சொல்லிபுட்டு..//

சமூக அழுக்குகளை, முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
-------

//அவர் போட்டிருந்த கால்சட்டையையின் ஜிப்பையே வைத்த கண் வாங்கமால் பார்த்துக் கொண்டிருந்தேன்//

திரும்பக் கடிப்பது, நாய்க்கடிக்கு மருந்தாகுமோ?

4:25 PM  
Blogger சுந்தரவடிவேல் said...

பதிவெல்லாம் தீயா இருக்கப்பேய்! நீங்களெல்லாம் வந்துதான் எங்கள மாதிரி ஆளுகளுக்கு நல்ல புத்தி வர வக்யணும்!

5:00 PM  
Blogger குழலி / Kuzhali said...

முதன் முறை பழக்கமில்லாத ஒரு பெண்ணிடம் பேசும் போது இயல்பாகவே ஆணினத்திடம் மிச்சமிருக்கும் கொஞ்சம் வெட்கத்தினால் தலை குனிந்து பேசும் வழக்கம்(எல்லா ஆண்களும் என்று சொல்லவில்லை, குறைந்தது என்னை மாதிரி ஆண்கள்)பல ஆண்களிடம் உண்டு, அது நிச்சயமாக மாரைப்பார்ப்பது என்பது ஆகாது... அதற்காக எல்லா ஆண்களும் மாரைபார்க்காமல் தான் பேசுவார்கள் என சொல்லவும் என்னால் முடியாது...

பதிவு நன்றாக உள்ளது

5:15 PM  
Blogger -/பெயரிலி. said...

/பதிவெல்லாம் தீயா இருக்கப்பேய்! நீங்களெல்லாம் வந்துதான் எங்கள மாதிரி ஆளுகளுக்கு நல்ல புத்தி வர வக்யணும்!/
சே! அவரசத்திலேயோ அவசரத்திலையோ முதலிலை "வயாக்ராக்கணும்" எண்டு வாசிச்சுத் துலைச்சிட்டன்

6:55 PM  
Blogger Vijayakumar said...

//சுரனை வரவைக்க வேண்டும் என்பதற்காக அவர் பேசும் போது முகத்தை பார்க்காமல் அவர் போட்டிருந்த கால்சட்டையையின் ஜிப்பையே வைத்த கண் வாங்கமால் பார்த்துக் கொண்டிருந்தேன். நெளிந்தார். வார்த்தையில் தடுமாறினார். வழிந்தார். அதே உணர்ச்சி+அவமானம் தானே எங்களுக்கும். அவர் திருந்த வேண்டும் என்பது என் ஆசையோ திருத்த வேண்டும் என்பது என் கடமையோ அல்ல.//

அப்படி போடுங்க அருவாளை. அமுக்கி வைக்கும் செக்ஸ் அறிவால் ஆர்வம் மிகுந்து பார்த்தாரோ என்னமோ? என்ன பன்றது? இப்படி தான் வாழ வேண்டும் பொம்பளை என்று எழுதி வைத்திருக்கிறதோ என்னமோ? நீங்கள் விலாசி தள்ளுங்க. சூப்பர் பதிவு.

6:55 PM  
Blogger SHIVAS said...

//இன்னும் இப்படிப்பட்ட ஆண்கள் எத்தனை பேர் நம் சமூகத்திலே//
இதை படிக்கும் பொழுது எதோ ஒரு குற்ற உணர்ச்சி என்னை தாக்குவதை என்னால் மறைக்க முடியவில்லை. மற்ற பின்னூட்டுகளைப் பார்க்கும் பொழுது நான் மட்டும் தான் இந்த தமிழ்மணத்திலேயே ஒரே ஈனப் பிறவியோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மதுர மல்லியின் வாசத்திற்கு இந்த காஞ்சி பிலிம்ஸ் total flat.

7:49 PM  
Blogger SnackDragon said...

அம்மணி, உங்களை வம்புக்கு இழுக்கவில்லை, ஆனால் பாருங்க,இப்படி ஒரு உண்மை இருக்கு :-O

//This came from the New England Journal of Medicine, so men take heart, and ladies - don't look at us like we're scum when you catch us. We're only doing it for our health.

Great news for girl watchers: Ogling over women's breasts is good for a man's health and can add years to his life, medical experts have discovered. According to the New England Journal of Medicine, "Just 10 minutes of staring at the charms of a female is roughly equivalent to a 30-minute aerobics work- out" declared gerontologist Dr. Karen Weatherby.

Dr. Weatherby and fellow researchers at three hospitals in Frankfurt, Germany, reached the startling conclusion after comparing the health of 200 male outpatients - half of whom were instructed to look at busty females daily, the other half told to refrain from doing so. The study revealed that after five years, the chest-watchers had lower blood pressure, slower resting pulse rates and fewer instances of coronary artery disease. "Sexual excitement gets the heart pumping and improves blood circulation," explains Dr. Weatherby.

"There's no question: Gazing at breasts makes men healthier."

"Our study indicates that engaging in this activity a few minutes daily cuts the risk of stroke and heart attack in half. We believe that by doing so consistently, the average man can extend his life four or five years."//

9:35 PM  
Blogger SnackDragon said...

Link :
http://techrepublic.com.com/5208-6230-0.html?forumID=8&threadID=175421&messageID=1782788

9:37 PM  
Blogger Balaji-Paari said...

கார்த்திக்:
என்ன இப்படி அலட்சியமான ஒரு லிங்க்- கொடுத்துட்டீங்க. எனக்கு இத படிச்சுட்டு உடனே சந்தேகம் வந்தது.

தயவு செய்து இத்தகைய செய்திகளை நீங்க உறுதி செஞ்சுட்டு போடுங்க. நீங்களே இவ்வளவு அலட்சியமா இருந்தா என்ன அர்த்தம்?

இந்த லிங்க பாருங்க.
http://urbanlegends.miningco.com/library/weekly/aa072600a.htm

Ogling Breasts Makes Men Live Longer

Nonexistent medical study touts supposed benefits of men's mammary preoccupations

By David Emery

From the email rumor mill comes a bit of news some will find too good to be true, others too stupid to be true. Something tells me gender will be a deciding factor...




This is not a joke. It came from the New England Journal of Medicine.
Great news for girl watchers: Ogling over women's breasts is good for a man's health and can add years to his life, medical experts have discovered. According to the New England Journal of Medicine, "Just 10 minutes of staring at the charms of a well-endowed female is roughly equivalent to a 30-minute aerobics work-out" declared gerontologist Dr. Karen Weatherby.

Dr. Weatherby and fellow researchers at three hospitals in Frankfurt, Germany, reached the startling conclusion after comparing the health of 200 male outpatients - half of whom were instructed to look at busty females daily, the other half told to refrain from doing so. The study revealed that after five years, the chest-watchers had lower blood pressure, slower resting pulse rates and fewer instances of coronary artery disease.

"Sexual excitement gets the heart pumping and improves blood circulation," explains Dr. Weatherby. "There's no question: Gazing at breasts makes men healthier." "Our study indicates that engaging in this activity a few minutes daily cuts the risk of stroke and heart attack in half. We believe that by doing so consistently, the average man can extend his life four to five years."



About Poll
Staring at women's breasts is most likely too...
Increase men's lifespans.
Have no effect on men's lifespans.
Put men at risk of severe bodily harm.


Current Results

Don't bet on it. No such study was published in the New England Journal of Medicine (see for yourself).

In fact, a search of the thousands of international medical journal articles contained in the Medline database turned up zero items on this topic and zero items authored by "Dr. Karen Weatherby" — who, presumably, does not even exist.

If it smacks of tabloid journalism, that's because it is. The email text began circulating in March or April 2000, shortly after a similar article appeared in the consistently misinformative Weekly World News (nor is this the first time we've encountered laughable rumors traceable to that source — see "Brain Floss" for another specimen).

It goes without saying — I hope — that it's unwise to take medical advice from supermarket tabloids and forwarded emails. Those who wish to increase their lifespans should try practicing common sense on a regular basis. It's more likely to help than any amount of breast ogling.

Admittedly, I don't have a medical study to back that up. Volunteers?

5:28 AM  
Blogger Balaji-Paari said...

கார்த்திக்கின் இந்த பதில் எனக்கு சந்தேகம் வரவழைத்ததற்கு காரணம் பெண்களுக்கு மனச்சோர்வு கொடுக்கும் ஒரு பிரச்சனை இந்த பார்வைகள். இது இப்படி இருக்கும் போது இதை உயர்த்தி பிடிக்க கார்த்திக் சொன்ன மாதிரியான மெயில்கள் மற்றும் திரிப்புகள் ரொம்ப சாதாரணமா செஞ்சுடறாங்க. இதுல கொடுமை என்னன்னா, இதை சரி பார்க்க கூட இயலாம, ஒரு மருத்துவ ஆய்வேட்டின் பெயரை கண்டதும் உடனே நம்புவது. இதில் குறிப்பிடப்பட்ட ஜர்னல் இண்டர்நெட்டில் இருக்கு. ஆனா இதில் தேடியதில் கரேன் வெதர்பை என்ற ஒரு பெயரே அதில் இல்லை.
கார்த்திக் நான் மதிக்கும் என் நல்ல நண்பர். உரத்து சிந்திப்பவர். பெண்கள் பற்றிய சிறந்த எண்ணமும் கருத்தும் கொண்டவர். ஆனால் அவரை போன்றவர்களே ஏமாற்றப்பட்டால் மற்றவர்களை நாம் என்ன சொல்ல?

மல்லி நீங்கள் முக்கியமான பிரச்சினையை முன் வைத்து அதை இயல்பாக பேசியதற்கு வாழ்த்துக்கள். தொடர்க உங்கள் பணி.

5:39 AM  
Blogger Vijayakumar said...

கார்த்திக்,

நீங்க மேலே எடுத்துப் போட்டிருக்கிற கட்டுரை+ இணைய சுட்டி எல்லாம் அநியாயம். இப்படி இண்டர்நெட் வழியா வேற மூட நம்பிக்கை தலைத்தோங்குதா.

அம்பிளைங்களுக்கு ஹார்ட் அட்டாக் ஜாஸ்தி வரும். அதுக்காக பொண்ணுங்களுக்கு ஹார்ட் அட்டாக் வறாதுன்னு யார் சொன்னது. அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் குறைக்கிறதுக்கு மல்லி இந்த பதிவில் சொல்லியிருக்கிற மாதிரி ஆம்பிளைங்களை எங்காவது பார்க்க சொன்ன எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன். நினைக்கவே கூசுகிறதே!!

7:05 AM  
Blogger SnackDragon said...

ஐயா மன்னிச்சுடுஙக எதோ அறியாத் புள்ள தெரியாம கேள்விப்பட்டத சொல்லிட்டேன். :-(

8:26 AM  
Blogger SnackDragon said...

அப்படி என்றால் ஜர்னல் என்று வருவதை எல்லாம் எப்படி சரிப்பார்ப்பது என்றுதான் குழம்புகிறேன். :-(

8:27 AM  
Blogger SnackDragon said...

பாரி இரண்டு விசயங்களுக்கு மன்னிப்பு கோருகிறேன்.

1. ஒன்று இதை உண்மை என்று இங்கு இட்டது. அது என் அறியாமையால் தான் விளைந்தது.

2. இதை உண்மையாகவே நம்பியது. :-( இதுதான் என்னை இன்னும் குடைகிறது.
இதை சொல்லாவிட்டால் இதுவே உண்மை என்று ஒரு வேளை வாழ்நாள் முழுக்க நம்பியிருக்க வாய்ப்பு உள்ளது. மன்னியுங்கள் சகோதரிகளே.

8:40 AM  
Blogger மதுரை மல்லி said...

ஃபீட்பேக் கொடுத்த எல்லாருக்கும் நன்றி. இங்கு இணையம் இன்னும் பெண்கள் மீதுள்ள ஆண்கள் பார்வையைப் போல தாரளமாக கிடைக்காததால் உடனடி பதில் தர முடியாநிலை.

கார்த்திக்ரமாஸ், நீங்க அந்த லிங்கிலிருந்து விசயத்தை எடுத்துப் போட்டதில் தப்பொன்றுமில்லை. வெளிநாடுகளில் நாலு பேர் பார்க்க வேண்டுமென்பதற்காகவே ஜெல் வைத்து பலூன் மாதிரி பெருக்கிக் கொண்டு அலைகிறார்கள். அது அது அவர்கள் மனநிலையை பொருத்த விசயம்.

ஆனால் இணையத்தில் இப்படி வதந்திகளை பரப்ப செய்வதும் ஒரு முறை. ஜஸ்ட் இக்னோர் இட்.

குழலி, நீங்கள் சொல்வது போல வெட்கப்பட்டு தலைக்குனிந்து பேசும் ஆணுக்கும், கண்டதை நோட்டமிடும் ஆணுக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன?

9:35 AM  
Blogger Ganesh Gopalasubramanian said...

// இங்கு இணையம் இன்னும் பெண்கள் மீதுள்ள ஆண்கள் பார்வையைப் போல தாரளமாக கிடைக்காததால் உடனடி பதில் தர முடியாநிலை. //

உங்களுக்கு கோபம் ஆண்களின் மீதா அல்லது தவறு செய்பவர்கள் மீதா..... ஏனா...... 'ஆண்கள் பார்வையைப் போல' என்று பொதுப்படையாக கூறுவது தவறு.
அதுக்காக ஆண்கள் எல்லாருமே தவறு செய்பவர்கள் தான் என்று கூறினால்....... சாரி நீங்கள் சொல்வது போல் சம்திங் பண்டமெண்டலி ராங் ஆன் யுவர் சைட்..

// ஜெல் வைத்து பலூன் மாதிரி பெருக்கிக் கொண்டு அலைகிறார்கள். அது அது அவர்கள் மனநிலையை பொருத்த விசயம். //

தமிழ்நாட்டில் நம் சிங்காரச் சென்னையில் பெருகி வரும் டீ .ஷர்ட்களையும் அருகி வரும் சுடிதார்களையும் என்னவென்று சொல்கிறீர்கள். பியூட்டி பார்லரும், மார்பக அறுவை சிகிச்சைகளும் பெருகி வருகிறது. இதுவும் அவர்கள் மனநிலையை பொருத்த விஷயமா? மே பி சம்திங் பண்டமெண்டலி ராங்.

// இதுக்கு பேரு பெமினிஷம்ன்னு நான் நினைக்கலை. //
கண்டிப்பாக இதுக்கு பேரு பெமினிஸம் கிடையாது. தொடருங்கள்.

// கொஞ்சம் எல்லை தாண்டி பேசினால் பெண்ணியம் பேசுகிறாள் //
என்ன எல்லை? யார் வகுத்தது.? சும்மா விளாசுங்கள்

நானும் ஒப்புக்கொள்கிறேன் ... மார்பு பார்த்து பேசும் வழக்கம் என்னிடமும் இருந்திருக்கின்றது....... அந்த adoloscent அழுக்குகள் அப்படியே அப்பிக் கொள்கின்றன...... வருந்துகிறேன். இனி தவறு செய்ய மாட்டேன்

2:35 PM  
Blogger நல்லடியார் said...

போலி பெண்ணுரிமை பேசுபவர்கள் கவனிக்கவும்.இந்த வம்பே வேணாமுன்னுதான் இஸ்லாம் பர்தா அணியச் சொல்கிறது.

5:31 PM  
Blogger குழலி / Kuzhali said...

This comment has been removed by a blog administrator.

6:16 PM  
Blogger நல்லடியார் said...

This comment has been removed by a blog administrator.

11:50 PM  
Blogger நல்லடியார் said...

//இங்கே மாரைப்பார்த்து பேசும் ஆண்களின் மனப்போக்கை கண்டிக்காமல் பர்தா அணிய சொல்லும் நாலடியரே பேண்ட் ஜிப்பை பார்த்து பெண்கள் பேசினால் அதை... அறுத்து எறிந்துவிடுவீர்களா//

போற போக்கைப் பார்த்தால் இதுக்கும் உரிமை வேணும் என்று சொன்னாலும் சொல்வீர்கள் போல.

நீங்கள் மார்பு பார்த்து பேசுபவர்களை சாடியதை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் ஜிப்பு பார்த்து பேசும் உங்கள் புதிய கலாச்சாரத்தை என்னவென்று சொல்வது?

அப்படியே, முகமூடி கேட்டிருப்பதக்கும் //திரும்பக் கடிப்பது, நாய்க்கடிக்கு மருந்தாகுமோ? // கொஞ்சம் பதில் சொல்லிட்டு உங்கள் சேவையைத் தொடருங்கள்.

11:57 PM  
Blogger நல்லடியார் said...

முகமூடி அல்ல. ஞானபீடம். அவரின் பெயர் ????????? என்று தெரிந்ததால் போட்டோவைப்பார்த்து குழம்பி விட்டேன்.

12:16 AM  
Blogger NONO said...

அழகை ரசிப்பதில் தவறே இல்லை.... இதுக்கு போய் நீங்க தேவையில்லாம வெக்கப்பட்டுக் கொள்கிரீர்களே! இதில் வெக்கபடுவதற்கு ஒன்றுமே இல்லையே.. உலக ஆண்கள் அனேகமானவர்களிடம் இந்த பழக்கம் உண்டு, இது மனித இயல்பும் கூட... ஏன் சில பெண்களுடமும் உண்டு... அவர் செய்த தவறு மட்டும் "வைத்த கண் வாங்காமல்" பாத்ததுதான்... இதுக்கு போய் கலாச்சாரம் கத்தரிக்காய் என்று....( இப்ப கோடை காலம் என்ற படியால் நான் எப்பவும் கறுப்பு கண்னாடியுடன்) he he...

4:01 AM  
Blogger மதுரை மல்லி said...

நண்பர்களே, என்னை மன்னிக்க வேண்டும். கொஞ்சம் அநாகரீகமாக இருந்த பின்னூட்டங்களை எடுத்துவிட்டேன். நல்லடியாரின் பின்னூடத்தையும் எடுத்து விட நினைத்தேன். எடுக்கவில்லை. பாரபட்சம் தான்.

முக்கியமாக குழலி,க்ளோனிங் ரமா மன்னிக்கவும்.கோபம் சகஜம் தான். ரௌத்ரம் வேண்டும். ஆபாசம் வேண்டாமே.

பர்தா அணிய சொன்னது ஏன் கோபப்படவேண்டும். அது அவருடைய விருப்பத்தை சொன்னார். அதில் அவர் செய்த தவறு அவர் கருத்தை இங்கு திணித்தது தான். பர்தா அணிய வேண்டியது அணிய கூடாதது அது அவர் அவர் தனிப்பட்ட விருப்பம்.

கோ.கணேஷ் அண்ணே, எனக்கு ஆண்கள் மீது கோபம் இல்லை. மொட்டைகட்டையாக் எழுதியதற்கு மன்னிப்பு கோருகிறேன். தாங்களின் புத்தக அழைப்புக்கு நன்றி. நேரமின்மை தான் காரணம்.

தாங்கள் சொன்ன அந்த அடலிசண்ட் அழுக்குகளைப் பற்றி தான் சாடினேன் தவிர, எல்லா ஆண்களும் அப்படிதான் என்பதை உமிழ அல்ல.

//நீங்களெல்லாம் கலாச்சாரத்தைப் பற்றி பேசுகிறீர்களே வெட்கமாக இல்லை? //

நல்லாடியாரே, கலாச்சாரம் யார் வேண்டும் என்று பேசினார்கள். பதிவை நன்றாக படிக்கவும். கலாச்சாரம் என்ற போர்வையில் மனதில் தங்கியிருக்கும் அழுக்கை தான் பேசியிருக்கிறேன்.

//நீங்கள் மார்பு பார்த்து பேசுபவர்களை சாடியதை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் ஜிப்பு பார்த்து பேசும் உங்கள் புதிய கலாச்சாரத்தை என்னவென்று சொல்வது?//

ம்ம்...ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹஹ ஹஹ் ஹ ஹஹ ஹஹ் ஹ... புதியகலாச்சாரத்தை உட்புகத்தாவிட்டால் உங்கள் பழையகலாச்சாரத்தை புகுத்துவது எப்படி? பதிவை இன்னொரு முறை படித்துப்பாருங்கள். ஜிப்பை பார்த்துக் கொண்டு அலைய வேண்டும் என்பதற்காக அதை செய்யவில்லை. அந்த நேரத்தில் அவருக்கு உணர்த்த நான் பயன்படுத்திய ஆயுதம். அவ்வளவு தான்.

//அழகை ரசிப்பதில் தவறே இல்லை.... இதுக்கு போய் நீங்க தேவையில்லாம வெக்கப்பட்டுக் கொள்கிரீர்களே! இதில் வெக்கபடுவதற்கு ஒன்றுமே இல்லையே.. உலக ஆண்கள் அனேகமானவர்களிடம் இந்த பழக்கம் உண்டு, இது மனித இயல்பும் கூட... ஏன் சில பெண்களுடமும் உண்டு... அவர் செய்த தவறு மட்டும் "வைத்த கண் வாங்காமல்" பாத்ததுதான்... இதுக்கு போய் கலாச்சாரம் கத்தரிக்காய் என்று....//

உங்கள் கறுப்புக்கண்ணாடியை மற்ற பெண்களை பார்க்க மட்டுமே பயன்படுத்துவீர்களோ? ஏன் உங்கள் வீட்டில் பெண்களே இல்லையா?

எரிச்சல் தான் வருகிறது.

இந்த மாதிரி திரிப்பவர்கள் ரைஸ்மில் ஓனரின் பையன்களாக தான் இருக்கவேண்டுமென நினைக்கிறேன். திரித்து ஆட்டா மைதாவாக குங்குமம் இலவசக இணைப்பாக ஃபீட் பேக் கொடுப்பதே இவர்கள் வேலையாகி விட்டதோ.

8:37 AM  
Blogger நல்லடியார் said...

இத்தகைய டார்ச்சர் 'பர்தா' பெண்களுக்கு குறைவு என்ற கருத்தில் எழுதினேன். உங்கள் எல்லோரையும் பர்தா அணியுங்கள் என்ற கருத்தில் அல்ல.

பெண்ணுரிமைவாதி (..?..) நேசகுமார் கூட வேறு ஒரு பின்னூட்டத்தில், அவரின் அமெரிக்க நண்பர்களுக்கு பர்தா அணிந்த பெண்கள் இதர பெண்களைவிட செக்ஸியாக இருப்பதாக சொல்லியிருந்தார். அதை கவனிக்க தவறி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

சபலிஸ்டுகள் எல்லா பகுதியுலும் இருக்கிறார்கள். அவர்களை நாமும் கண்டிப்போம்.

என் பதிவில் மதச்சாயம் இருந்தாலோ குதர்க்கம் இருந்தாலோ தாரளமாக நீக்கி விடலாம். நன்றி.

1:59 PM  
Blogger NONO said...

"உங்கள் கறுப்புக்கண்ணாடியை மற்ற பெண்களை பார்க்க மட்டுமே பயன்படுத்துவீர்களோ? ஏன் உங்கள் வீட்டில் பெண்களே இல்லையா?"

இது என்ன கேள்வி... இப்படி கேட்டால் உலகத்தில் இன விருத்தியே நடைபேறுகிறதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா...? எல்லா ஆண்களும் எதிரில் தென்படுகின்ற பெண்களை அக்கா தங்கச்சி உறவுமுயையில் பார்த்தா மனித இனமே அழிந்து போய்விடாதா...?

" -ஒருவர அனனேகமாக நாம் பார்வையால்தான் எடைபொடுகிறோம்... அவர்களுடன் பழகி அல்ல. " எங்கையோ படித்த ஞாபகம்...

4:05 PM  
Blogger -L-L-D-a-s-u said...

அடி ஆத்தாடி .. என்னபா இந்த பொன்னு அனுகுண்டோட வராப்படி ..பேசாம 'மதுரை குண்டு மல்லின்னு' வச்சுக்கம்மா...

மற்றபடி.. என்ன சொல்றதுன்னே தெரியலே.. + போட்டேன்.. அம்புட்டுதேன் ..

5:37 PM  
Blogger கயல்விழி said...

மல்லி அழகாய் சொல்லியிருக்கிறியள். உண்மையா அந்த மனிசன் உணர்ந்திருக்கும் என்றால் செருப்பால ஒண்ணு உறைக்கப்போட்ட மாதிரி உணர்ந்திருப்பார். இனி நேர சொல்லப்பாருங்க. ஏன் உங்கட கண் எந்த நேரமும் மேய்ஞ்ச வண்ணம் இருக்கு என்று ஒரு கேள்வி. நாக்கை பிடிங்கிக்கிற மாதிரிக்கேளுங்க.

அவை செய்யிறதைப்போல நீங்க செய்த இருவருக்கும் என்ன வித்தியாசம்? சுட்டிக்காட்டுங்கள். மறுபடி இப்படி சந்தர்ப்பம் வந்தால் உறைக்கும்.

6:09 PM  
Blogger neyvelivichu.blogspot.com said...

மிகவும் தெளிவான பதிவு..

இப்படி ஒரு நோய் இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வந்தது.. இங்கே நண்பர்களிடம் கேட்டபோது ஒரு கருத்து சொன்னார்கள்.. "ண்Y நகரத்தில் 15 வயது முதல் பேரிளம் பெண்கள் வரை அனைவரும் (இங்கெ பிறந்து வளர்ந்த, படிக்க வந்த இந்திய பெண்களையும் சேர்த்து) தங்கள் மார்பு தெரியத் தான் உடை அணிகிறார்கள்.. சில நேரங்களில் நாம் கூச்சப்படு கண்ணை மூடிக்கொள்ள வேண்டி இருக்கிறது.. கோடைக்காலம் எப்பொ வரும், எப்பொ உடைகளைக் களையலாம் என்று இருக்கிறார்கள். பார்த்து சலித்து விட்டதால் அதன் மீதுள்ள ஈர்ப்பு குறைந்து விட்டது.."

நம் நாட்டில் பிரித்தே வைப்பதால், எதொ பெரிய விஷயம் என்று பார்க்கிறார்களோ.. இங்கே யாரும் பேருந்தில் ரயிலில் இடித்ததாகவும் கேள்வி பட்டதே இல்லை..

நண்பர்கள் வீட்டுக்கு வரும் போது அவர்களை அணைத்து வரவேற்பது இங்கு சகஜம். குழந்தைகள் பிறந்த 3ம் மாதமே தனி படுக்கைஅறைக்கு அனுப்பப் படுகிறார்கள். அமாவாசை, கிருத்திகை என்பது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. காய்ந்து போன மாடு தான் சுவரொட்டிகளைத் தின்கிறது.



இது என்னுடைய கருத்து..

6:40 PM  
Blogger contivity said...

மருத மல்லி யக்கோவ்..

நல்ல போஸ்டு தான்... தடாலடியா ஆரம்பிச்சிருக்கீங்க... தூள் கிளப்புங்க...

இந்த ஈரஓடுக்கு நேச குமாருக்கு ஜல்லி அடிக்கிறதத் தவிர வேறு எதுவும் தெரியாதா? தமில் மணம் இல்லை ஐயா.. தமிழ்மணம்..

12:31 PM  
Blogger நல்லடியார் said...

//இந்த ஈரஓடுக்கு நேச குமாருக்கு ஜல்லி அடிக்கிறதத் தவிர வேறு எதுவும் தெரியாதா?// என் சந்தேகமெல்லாம் நேசகுமாரே, ஆரோக்கியம், ஈரோடு பிலிம்ஸ் பேர்லயும் எழுதி வராருன்னு நெனக்கிறேன்.

மல்லியக்கா, பர்தாவைப்பத்தி சொன்னதும் பொசுக்குன்னு கோவம் பொத்துக்கிட்டு வந்துருச்சு சிலருக்கு. பர்தா சரியோ தப்போ, அதனால இத்தகைய டார்ச்சர் இல்லைங்கிறதை ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா? நன்றி.

4:09 PM  
Blogger அப்பாவி said...

//இன்னும் இப்படிப்பட்ட ஆண்கள் எத்தனை பேர் நம் சமூகத்திலே.// அப்படின்னு மல்லியக்கா் கேட்டிருக்காங்க. அது இருக்காங்க கொள்ளை பேரு!

நம்ம நல்லடியார் சொல்லியிருக்காரு, "போலி பெண்ணுரிமை பேசுபவர்கள் கவனிக்கவும்.இந்த வம்பே வேணாமுன்னுதான் இஸ்லாம் பர்தா அணியச் சொல்கிறது." அப்படின்னு.

நல்லா கவுனிங்க! இஸ்லாம் சொல்லுது, 'கெட்ட கெட்ட பசங்கள்லாம் இருக்காங்க, அதனால பொண்ணுங்களெல்லாம் கொஞ்சம் இழுத்து போர்த்திக்கினு போங்கோ'ன்னு. அதை புடிக்காதவங்க சொல்றாங்க, 'அந்தாளுங்க சொல்றதெல்லாம் கேட்காதே. அவங்க உன்னை அடிமைப்படுத்துறாங்க. உன்னை சுதந்திரமா விட மாட்டேங்குறாங்க. அதனால உனக்கு பிடிச்ச மாதிரி எப்படி வேணும்னாலும் நீ இருந்துக்கோ' அப்படின்னு.

நான் தெரியாமத்தான் கேக்குறேன்,
- இந்த மாதிரி 'பெண்ணுரிமை' பேசுறவங்க வீட்டு பொம்பள புள்ளங்க, vishytheking சொன்னமாதிரி NY கலாச்சாரத்தை பின்பற்றி டிரஸ் பண்ணனும்னு விரும்புனா, இவங்க இதே அறிவுரையை சொல்வாங்களா?
- இவங்களோட அறிவுரையை பின்பற்றுனா, மல்லியக்கா சலிச்சுக்குற மாதிரி 'சபலிஸ்டு'களுக்கு வசதி செஞ்சு கொடுத்த மாதிரி ஆயிடாதா?

நான் தெரியாமத்தான் கேக்குறேன். தெரிஞ்சவங்க யாராச்சும் பதில் சொல்லுங்க!

இப்படிக்கு
அப்பாவி

7:31 AM  
Blogger மதுரை மல்லி said...

வாசகர்களே மன்னிக்கனும்.

உங்கள் கருத்துக்களை எல்லாம் படித்தேன்.உங்களுடன் விவாதிக்க ஆசை. என்னால் அதிக நேரம் இணையத்தில் செலவழிக்க முடியாது. தமிழில் டைப் செய்வது வேறு முக்கி முக்கி தட்டு தடுமாறி ஒரு கட்டுரையை அடித்து முடிக்க ஒரு வாரம் ஆகிறது. கருத்து சொன்ன எல்லாருக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது, எல்லோருக்கும் என் பதில் கட்டாயம் உண்டு.

6:42 PM  
Blogger கறுப்பி said...

மல்லி, இப்படியான அனுபவம் அனேக பெண்களுக்கு இருக்கும் என்றே நம்புகின்றேன். இப்படியாக உடம்பு மேயும் ஆண்கள் பலரை நானும் சந்தித்திருக்கின்றேன். தெரிந்தவர் தெரியாதவர் யாராயினும் நான் சிரித்த படியே என்ன பார்வை எங்கெல்லாமோ போகுது என்று அவர்கள் முகத்தில் அசடு வழியச் செய்திருக்கின்றேன்.
இதே நேரம் இன்னுமொன்றைக் கவனிக்க வேண்டும் மல்லி தாங்கள் சொன்னது போல் ஆணின் ஜிப்பைத் தாங்கள் பார்த்தால் இதுதான் சந்தர்ப்பம் என்று விட்டுப் போட்டு நிற்பார்கள் அனேக ஆண்களுக்கு ஒரு பெண் தனது உறுப்பைப் பார்ப்பது பிடித்திருக்கும் சமாச்சாரம்.
எனக்குள் இன்னுமொரு கேள்வியும் எழுகின்றது. கவர்ச்சியாக அழகாக இருக்கும் பெண்களை நானும் பார்வையால் மேய்வதுண்டு. அழகை ரசிப்பவள் நான். பின்னர் நன்றாக அழகாக இருக்கிறது என்று என்னுடைய கொமெண்டையும் வைப்பேன்.

7:07 PM  
Blogger கவிதா | Kavitha said...

அவர்கள் மார்பை பார்த்து பேசிகிறார்கள் என்பதற்கு நீங்கள் ஜிப்பை பார்த்து பேசுவது சரியில்லை என்பதை விட நாகரீகம் இல்லை. அப்படித்தான் அவர்களை திருத்தவேண்டும் இல்லை.. நீங்கள் ஜிப்பை பார்ப்பதை விட நேருக்கு நேராக "கண்ணை பார்த்து பேசுங்கள்" என்று சொல்லிவிட்டு இருக்கலாம், இல்லை உங்கள் ஆடையை சரிசெய்வது போல் நீங்கள் அவர் பார்த்ததை கவனித்து விட்டீர்கள் என்று உணர்த்தி இருக்கலாம். எல்லாவற்றிக்கும் மேல் அவர்கள் பார்க்காத வண்ணம் உடை உடுத்துதல் சிறந்த முறை என்பது என் எண்ணம்.

நல்ல பதிவு.

11:01 AM  

Post a Comment

<< Home