Sunday, November 20, 2005

கலாச்சார ஆணுறை

அண்மையில் நடக்கும் கலாச்சாரக் கூத்தில் வலுக்கட்டாயமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நண்பர் ரொம்பவே கொதித்துப் போயிருந்தார். உணவு இடைவேளையில் தன் நண்பர்களிடம் "வடக்கிலிருந்து வந்த ஒரு நடிகை தமிழ் பெண்களை எப்படி ஈழிவுப்படுத்தலாம். தேவ****. அதற்கு இங்கிருக்கும் ஒரு நடிகை வேறு சப்போர்ட். அவளுக்கு தமிழ் கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா?" என்று ஏக வசனத்தில் அந்த நடிகையை சில நேரம் அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். நான் ரொம்பவே கொதித்துப் போனேன். அக்கூட்டத்தில் நான் நின்றதும் எல்லோரும் கப்சிப்.

மெதுவாக கேட்டேன் "நீங்க திட்டிட்டுருக்கிற அந்த நடிகை என்ன சொன்னா? சொல்லுங்க?". ஒவ்வொருவரிடமிருந்து ஒவ்வொரு பதில்.

"ஹீம்... தமிழ்கலாச்சாரம் என்றால் என்னத் தெரியுமா?" என்று மறுபடி நான்.

கோஷ்டிகானமாக எல்லோரும் ஒரே குரலில்
"பெண்கள் புடவைக் கட்டிக் கொள்வது"
"விருந்தாளி வந்தால் உபசரிப்பது"
"நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு லட்சுமிகடாட்சமாக விளங்குவது"
"கணவனை இழந்தால் மற்ற ஆண் யாரையும் நினைக்காமல் வாழ்வது"

ஒரு நண்பர் கொஞ்சம் பார்வேர்டாகச் சென்று "நம்ம கலாச்சாரத்தால் தான் ஃபாரின் மாதிரி எல்லாம் எயிட்ஸ் எல்லாம் அதிகம் பரவவுவதேயில்லை".

"ஏன் சார்! உங்களுக்குன்னு ஏதும் கலாச்சாரத்தில் குறிப்பு இல்லையா?"

"ஏன் இல்லை. நாங்க எல்லாம் வேட்டிக் கட்டிக்கிடுறோமில்ல. அதுவே கலாச்சாரத்தின் குறியீடு தானே?"

"அப்போ ஏன் இப்போ பேண்ட் போட்டிருக்கிறீர்கள்?"

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வீம்பாக சுற்றி வளைத்து பதில் வருகிறது ஒருவரிடம் "அது அந்த காலம். ஏன் நீங்களும் தான் பேண்ட் போடுறீங்களே?"

"நாங்க பேண்ட் போடுறது இருக்கட்டும். கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லுங்க. அந்த நடிகை என்ன சொன்னா? இந்த நடிகை என்ன சொன்னால்லாம் அப்புறம். நீங்க என்ன கலாச்சாரத்துக்கு ரெப்ரெஸண்டேட்டிவ்வா. உங்க கலாச்சாரத்துல பொண்டாட்டியை செத்துப் போன மற்ற பெண் யாரையும் நினைக்காமல் வாழ்றதுன்னு எதுவுமே இல்லையா?"

"அப்படியில்லே. பெரியவங்க சொல்லிட்டுப் போயிருக்காங்கன்னா சும்மாவா? பொண்ணுக்கு கற்புங்கிறது எவ்வளவு முக்கியம்"

"கற்புன்னா என்ன சார்?"

"கற்புன்னா கர்பப்பை" என்றார் ஒருவர். "கற்புன்னா ஒருத்திக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒருவனுடன் மட்டுமே வாழ்வது" என்றார் மற்றொருவர்.

"ஏன் உங்களுக்குன்னு கற்புங்கிறது எதுவுமே இல்லையா?"

"????"... கொஞ்சூண்டு அதிகம் படித்தவர் போல தோன்றியவர் "பாரதி என்ன சொல்லியிருக்காருன்னா... கற்புங்கிறதை ஆண் பெண்ணுக்கு பொதுவா வைக்கனுமுன்னு சொல்லியிருக்காரு"

"ஏன் இப்போ கற்பு பொதுவா இல்லையா?"

"????"

Bullshit

இந்த மந்தைக் கூட்டத்தோடு பேசிக் கொண்டிருப்பதை விட தலைக்கு மேல் இருக்கும் என் வேலையை பார்க்கச் செல்லலாம். கலாச்சாரம் என்பது இவர்களுக்கெல்லாம் ஆணுறையைப் போன்றது. தேவையான போது எடுத்து அணிந்துக் கொண்டு இன்பம் காண்பதும். தேவைப்படாத போது தூக்கி எறியப்படுவதும் தானே ஆணுறைக்கு நிர்ணயிக்கப்பட்ட விதி. Want to have safe pleasure and sex, use condom.

18 Comments:

Blogger சினேகிதி said...

where have u been?

6:06 AM  
Blogger gulf-tamilan said...

why again and again the same subject!!!!!!!!!! whats the full meaning of virgin in tamil culture????????

6:37 AM  
Blogger Muthu said...

கலாச்சார குண்டாந்தடிகளை மறந்துடுங்க.

நீங்க சொல்லுங்க, கலாச்சாரம் என்றால் என்ன?

9:41 AM  
Blogger Ramya Nageswaran said...

மதுர மல்லி..நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாளா ஆளைக் காணுமே!

9:55 AM  
Blogger மதுரை மல்லி said...

சில முக்கிய வேலை காரணமாக எழுத முடியவில்லை ரம்யா, சினேகிதி.

//whats the full meaning of virgin in tamil culture???????? //
gulf tamilan, ask yourself this question?

//நீங்க சொல்லுங்க, கலாச்சாரம் என்றால் என்ன? //
சொல்லியாகி விட்டது.

6:48 AM  
Blogger G.Ragavan said...

பிரமாதம் மல்லி. எதிர்க்கனுமுன்னு முடிவெடுத்துட்டாங்க. காரணங்கள் எக்கச்சக்கமா கெடைக்குமே! விட்டுத்தள்ளுங்க.

6:33 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

//இந்த மந்தைக் கூட்டத்தோடு பேசிக் கொண்டிருப்பதை விட தலைக்கு மேல் இருக்கும் என் வேலையை பார்க்கச் செல்லலாம்//

athu

6:40 PM  
Blogger ROSAVASANTH said...

இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன். பாரட்டுக்கள்!

6:40 PM  
Blogger ஜோ/Joe said...

//"ஹீம்... தமிழ்கலாச்சாரம் என்றால் என்னத் தெரியுமா?" என்று மறுபடி நான்.

கோஷ்டிகானமாக எல்லோரும் ஒரே குரலில்
"பெண்கள் புடவைக் கட்டிக் கொள்வது"
"விருந்தாளி வந்தால் உபசரிப்பது"
"நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு லட்சுமிகடாட்சமாக விளங்குவது"
"கணவனை இழந்தால் மற்ற ஆண் யாரையும் நினைக்காமல் வாழ்வது"//

இவ்வளவு படிச்ச கேனையன்கள் இருப்பாங்கண்ணு நான் நம்பல்லை.

7:12 PM  
Blogger neyvelivichu.blogspot.com said...

kalakkitteenga madurai malli..

anbudan vichchu

7:22 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

//இவ்வளவு படிச்ச கேனையன்கள் இருப்பாங்கண்ணு நான் நம்பல்லை.
//
Ditto, Joe :-(

7:36 PM  
Blogger ilavanji said...

//இவ்வளவு படிச்ச கேனையன்கள் இருப்பாங்கண்ணு நான் நம்பல்லை//

ஜோ, பாலா, இருக்கறாங்கனே வச்சிப்போம்! மல்லி, நீங்க சொன்னது இந்த படிச்ச கேனையனுங்க நினைச்சுக்கிட்டு இருக்கற கலாச்சாரம்னா என்னங்கறது... காலாச்சாரம்னா என்னங்கற "உங்க கருத்தை" சொல்லவே இல்லையே!

ஒரு நல்ல கருத்து நல்ல உவமையோடு கிடைச்சா அதை மட்டும் சொல்லுங்க. உங்க கருத்துக்கு வலுசேர்க்க கூட இருக்கவங்களை கேனையனுங்க ஆக்காதிங்க!

10:08 PM  
Blogger ஒரு பொடிச்சி said...

//"நம்ம கலாச்சாரத்தால் தான் ஃபாரின் மாதிரி எல்லாம் எயிட்ஸ் எல்லாம் அதிகம் பரவவுவதேயில்லை".//
எவ்வளவு பொய்/ எவ்வளவு அறியாமை!
நீங்க எழுதியுள்ளதுபோலவே -எழுதினதை படிக்கிறதுக்கு முதல் மீடியாவால மிகைப்படுத்தப்பட்டு ஏற்படுத்தப்படுற அச்சம்- இன்னார் என்ன சொன்னது என்பதை அறியாத அறியாமையும் ஒரு காரணம். மற்றப்படி சமீபத்தில TV யில ஆபிரிக்க நாடொன்றில கறுப்பினஆணே போய் எடுத்த எயிட்ஸ் பற்றின ஆவணப்படம் காட்டினாங்க. அதில ஒவ்வொரு (அக் கிராமத்து 14-20 வயது கறுப்பின) ஆண்களிடமும் நீ எயிட்ஸ் உடன் இன்னொரு 'உனதினப் பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்கிறாயே.. உனது தங்கையுடன் உன்னைப்போல ஒரு இளைஞன் உறவு வைத்துக்கொண்டால் அது சரியா' என்று கேட்க அது எனக்கொரு பிரச்சினையில்லை என்று பதில் சொன்னார் ஒருவர்! அந்த கறுப்பின ஆவணப்படக்காரர்,
ஆபிரிக்காவின் எயிட்ஸ் அபாயத்திற்கு தனியே வெள்ளையர்களை மட்டும் குறை சொல்ல முடியாது, ஆபிரிக்க ஆண்களின் தொடர்சியான ஆசட்டையீனம்/ஆணவமும் அதற்கான பொறுப்பெடுக்கவேண்டும் என்று f-word சொல்லி கடுப்புடன் கூறினார். இது தமிழ்/எல்லா ஆண்களுக்கும் பொருந்தும். பெண்களின் கற்பைப்பற்றி சொன்னால் இவர்களுக்குக்கொதிக்கிறது!
Something IS fundamentally wrong!

10:53 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

**************
இளவஞ்சி said...
//இவ்வளவு படிச்ச கேனையன்கள் இருப்பாங்கண்ணு நான் நம்பல்லை//

ஜோ, பாலா, இருக்கறாங்கனே வச்சிப்போம்!
******************

நானும்,ஜோவும் கேனையன்களா என்ன ;-) This is 3-MUCH !!!

11:09 PM  
Blogger ilavanji said...

பாலா! மன்னிக்கவும்.. இப்படி மாத்திப்படிங்க..

//ஜோ, பாலா: அப்படி இருக்கறாங்கனே வச்சிப்போம்! //

அரைத்தூக்கத்துல பின்னூட்டம் போட்டா இதுதானப்பா வம்பு! :)

11:30 PM  
Blogger மதுரை மல்லி said...

நிறைய பேருக்கு நான் கலாச்சாரம் என்னவென்று சொல்லவில்லையென்று மகா கோபம்.

தெரியாமல் தான் கேட்கிறேன் கலாச்சாரம் என்றால் என்ன? அது தெரியாமல் வளர்ந்துவிட்டாள் இவள். எனக்கு தெரிந்தவைகளை தலைப்பிலிட்டு விட்டேன். தெரிந்தவர்கள் Please define கலாச்சாரம்.

நண்பர் புலிப்பாண்டிக்கு அண்டா அண்டாவாக கலாச்சாரம் பற்றி தெரியுமென நினைக்கிறேன். சனிடெரி நாப்கினை சொல்லியிருக்கிறார். சினிமா நடிகையிலிருந்து தான் கலாச்சாரம் சீரழிவதும், ஒரு நடிகனால் தான் கலாச்சாரம் தூக்கி நிறுத்தப்படுவதும் நடக்கிறதோ?[அண்மையில் சிவகாசி பட வசன கடுப்பு]. இருட்டில் உட்கார்ந்து பார்க்கும் சினிமாவை புறந்தள்ளி விட்டு வெளிச்சத்தில் நடக்கும் இருட்டடிப்புகளை காணுங்கள்.உங்களுக்கு பதில் போட்டதே வீண்.

//உங்க கருத்துக்கு வலுசேர்க்க கூட இருக்கவங்களை கேனையனுங்க ஆக்காதிங்க! //
இளவஞ்சி, என் கருத்துக்கு வலுசேர்க்க எனக்கு அவசியமில்லை. நான் எப்படி யாரை கேனையன் ஆக்கினேன் என விளக்குவீர்களா?

ஜோ, பாலா, இவ்ளோ படிச்ச கேனையன்கள் இருக்கப் போய் தான் இவ்வளவு கூத்தாட்டமும் தமிழ்நாட்டில்.

நன்றி உஷா, ராகவன், விசிதிகிங்.

பொடிச்சி, அருமையாக சொன்னீர்கள்.கருத்துக்கு மிக்க நன்றி. கல்யாணத்துக்கு முன் ஆண் வேறு யாரிடமாவது உறவுக் கொண்டிருந்தால் அவன் ஆண்பிள்ளை.அதுவே பெண்ணாக இருந்தால் கலாச்சாரம் முன்னே வந்து குதித்துவிடும்.

இந்தியா எயிட்ஸில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்.கலாச்சாரம் எயிட்ஸிலிருந்து யாவரையும் காப்பாற்றுமாக.

11:33 PM  
Blogger மதுரை மல்லி said...

நன்றி நவிலலில் விட்டுப் போய்விட்டார்- ரோசவசந்துக்கும் நன்றி.

11:42 PM  
Blogger முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

Excellent - Very impressive blog post. My friend introduced your blog to me. Conceptually I am accepting your points. I mentioned this in my blog tamilpaper.blogspot.com – for my posts, people don’t comment in blog, but they call and comment or send email…

7:05 PM  

Post a Comment

<< Home