Sunday, November 20, 2005

கலாச்சார ஆணுறை

அண்மையில் நடக்கும் கலாச்சாரக் கூத்தில் வலுக்கட்டாயமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நண்பர் ரொம்பவே கொதித்துப் போயிருந்தார். உணவு இடைவேளையில் தன் நண்பர்களிடம் "வடக்கிலிருந்து வந்த ஒரு நடிகை தமிழ் பெண்களை எப்படி ஈழிவுப்படுத்தலாம். தேவ****. அதற்கு இங்கிருக்கும் ஒரு நடிகை வேறு சப்போர்ட். அவளுக்கு தமிழ் கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா?" என்று ஏக வசனத்தில் அந்த நடிகையை சில நேரம் அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். நான் ரொம்பவே கொதித்துப் போனேன். அக்கூட்டத்தில் நான் நின்றதும் எல்லோரும் கப்சிப்.

மெதுவாக கேட்டேன் "நீங்க திட்டிட்டுருக்கிற அந்த நடிகை என்ன சொன்னா? சொல்லுங்க?". ஒவ்வொருவரிடமிருந்து ஒவ்வொரு பதில்.

"ஹீம்... தமிழ்கலாச்சாரம் என்றால் என்னத் தெரியுமா?" என்று மறுபடி நான்.

கோஷ்டிகானமாக எல்லோரும் ஒரே குரலில்
"பெண்கள் புடவைக் கட்டிக் கொள்வது"
"விருந்தாளி வந்தால் உபசரிப்பது"
"நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு லட்சுமிகடாட்சமாக விளங்குவது"
"கணவனை இழந்தால் மற்ற ஆண் யாரையும் நினைக்காமல் வாழ்வது"

ஒரு நண்பர் கொஞ்சம் பார்வேர்டாகச் சென்று "நம்ம கலாச்சாரத்தால் தான் ஃபாரின் மாதிரி எல்லாம் எயிட்ஸ் எல்லாம் அதிகம் பரவவுவதேயில்லை".

"ஏன் சார்! உங்களுக்குன்னு ஏதும் கலாச்சாரத்தில் குறிப்பு இல்லையா?"

"ஏன் இல்லை. நாங்க எல்லாம் வேட்டிக் கட்டிக்கிடுறோமில்ல. அதுவே கலாச்சாரத்தின் குறியீடு தானே?"

"அப்போ ஏன் இப்போ பேண்ட் போட்டிருக்கிறீர்கள்?"

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வீம்பாக சுற்றி வளைத்து பதில் வருகிறது ஒருவரிடம் "அது அந்த காலம். ஏன் நீங்களும் தான் பேண்ட் போடுறீங்களே?"

"நாங்க பேண்ட் போடுறது இருக்கட்டும். கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லுங்க. அந்த நடிகை என்ன சொன்னா? இந்த நடிகை என்ன சொன்னால்லாம் அப்புறம். நீங்க என்ன கலாச்சாரத்துக்கு ரெப்ரெஸண்டேட்டிவ்வா. உங்க கலாச்சாரத்துல பொண்டாட்டியை செத்துப் போன மற்ற பெண் யாரையும் நினைக்காமல் வாழ்றதுன்னு எதுவுமே இல்லையா?"

"அப்படியில்லே. பெரியவங்க சொல்லிட்டுப் போயிருக்காங்கன்னா சும்மாவா? பொண்ணுக்கு கற்புங்கிறது எவ்வளவு முக்கியம்"

"கற்புன்னா என்ன சார்?"

"கற்புன்னா கர்பப்பை" என்றார் ஒருவர். "கற்புன்னா ஒருத்திக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒருவனுடன் மட்டுமே வாழ்வது" என்றார் மற்றொருவர்.

"ஏன் உங்களுக்குன்னு கற்புங்கிறது எதுவுமே இல்லையா?"

"????"... கொஞ்சூண்டு அதிகம் படித்தவர் போல தோன்றியவர் "பாரதி என்ன சொல்லியிருக்காருன்னா... கற்புங்கிறதை ஆண் பெண்ணுக்கு பொதுவா வைக்கனுமுன்னு சொல்லியிருக்காரு"

"ஏன் இப்போ கற்பு பொதுவா இல்லையா?"

"????"

Bullshit

இந்த மந்தைக் கூட்டத்தோடு பேசிக் கொண்டிருப்பதை விட தலைக்கு மேல் இருக்கும் என் வேலையை பார்க்கச் செல்லலாம். கலாச்சாரம் என்பது இவர்களுக்கெல்லாம் ஆணுறையைப் போன்றது. தேவையான போது எடுத்து அணிந்துக் கொண்டு இன்பம் காண்பதும். தேவைப்படாத போது தூக்கி எறியப்படுவதும் தானே ஆணுறைக்கு நிர்ணயிக்கப்பட்ட விதி. Want to have safe pleasure and sex, use condom.